Home இந்தியா தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக-அதிமுக இடையில் கடும் போட்டி

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக-அதிமுக இடையில் கடும் போட்டி

743
0
SHARE
Ad

தமிழ்நாடு : உள்ளாட்சி தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு

சென்னை : தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று புதன்கிழமை செப்டம்பர் 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

நேற்று செவ்வாய்க்கிழமை வரையில் ஊரக-உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 64 ஆயிரத்து 299 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்ற புள்ளிவிவரங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

நாளை செப்டம்பர் 23-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான இறுதிநாள் செப்டம்பர் 25-ஆகும்.

அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்ந்து இணைந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இன்னும் தொடர்கின்றன.

பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் தனித்தே களம் காண்கின்றன.

இந்த உள்ளாட்சித் தேர்தல்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடுமையான சவாலாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி,கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கி இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து திமுக-அதிமுக இரண்டு கட்சிகளும் மீண்டும் அடுத்த களப் போராட்டமான உள்ளாட்சித் தேர்தல்களில் மோதுவதற்கு தயாராகி வருகின்றன.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal