Home நாடு “இறைவன் தீமைகளை அகற்றி ஒளி தருவான் என்று நம்புவோம்”- வேதமூர்த்தி தீபாவளி வாழ்த்து

“இறைவன் தீமைகளை அகற்றி ஒளி தருவான் என்று நம்புவோம்”- வேதமூர்த்தி தீபாவளி வாழ்த்து

899
0
SHARE
Ad

மலேசிய முன்னேற்றக் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் ஒற்றுமைத் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

தீபத் திருநாள்!

ஒளிவெள்ளம் காரிருளை வென்ற நாள்; ஆம், நன்மை தீமையை வீழ்த்திய அதே தினம். ஒவ்வொரு இமைப்பொழுதும் என நிமிடந்தோறும் நாள்தோறும் மாதந்தோறும் ஆண்டுதோறும் நாம் அனைவரும் தீமையை எதிர்கொள்ளும் அதேவேளை, அவற்றை சமாளித்தும் வருகிறோம். எனினும் தீபாவளியன்று, எல்லாம் வல்ல இறைவன் தீமைகளை அகற்றி ஒளி தருவான் என்று நம்புகிறோம்.

இறைவன்மிது நம்பிக்கை வைப்பது மட்டும் போதுமானதல்ல; ஆண்டுக்கு ஒரு நாள் என, தீபாவளி அன்று மட்டும் தீபத்தை ஏற்றி ஒரு நாள் அத்தியாயமாக அதைக் கருதக்கூடாது; மாறாக அணுதினமும் தீபம் ஏற்றி இறைபாதம் பணிதல் வேண்டும்.

#TamilSchoolmychoice

அநீதி, சுயநலப்போக்கு, சூழ்ச்சி போன்ற தீய குணங்கள் நமக்குள்ளோ, மூன்றாம் தரப்பிடமோ அல்லது அரசாங்கத் தரப்பிடமோ காணப்பட்டால்கூட, அத்தகைய தீய குணங்களை வேரருக்க நாம் தார்மீக பொறுப்பேற்கும்போது தெய்வ ஒளியானது, நம்மை இன்னும் பிரகாசப்படுத்தும். இக்கலியுகத்தில் நவீன நரகாசுரனை வீழ்த்த புதிய கிருஷ்ண பரமாத்மா பூமிக்கு வரப்போவதில்லை. நீங்கள்தான் கிருஷ்ண அவதாரம் ஏற்க வேண்டும். ஒவ்வொரு நாளும் உங்கள் மனசாட்சியுடன் பேசுங்கள். நீங்களே கிருஷ்ணர்.

தீபத் திருநாளின் தீபஒளி உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் பிரகாசிக்கச் செய்யட்டும்.

இன்ப தீபாவளி வாழ்த்துகளுடன்,

பொன்.வேதமூர்த்தி
தேசியத் தலைவர்
மலேசிய முன்னேற்றக் கட்சி


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal