Home நாடு “ஒற்றுமை உற்சாகத்தோடும், புதிய நடைமுறைகளோடும் கொண்டாடுவோம்” பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

“ஒற்றுமை உற்சாகத்தோடும், புதிய நடைமுறைகளோடும் கொண்டாடுவோம்” பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

482
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : இன்று வியாழக்கிழமை கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியை மலேசியக் குடும்பத்தின் அங்கமான இந்துப் பெருமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

“இந்தப் பெருநாளின் உற்சாகமும் கொண்டாட்டமும் நமது அன்புக்குரிய நாட்டில் நிலவும் ஒற்றுமையை எடுத்துக் கூறும் இன்னொரு நிகழ்வாகும். புதிய நடைமுறைகளோடு இந்துப் பெருமக்கள் இதனை முழுமையான மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். தீப ஒளி விழாவான இன்று ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தியும் மலேசியக் குடும்பம் என்ற முறையில் ஒற்றுமையுடனும் கொண்டாட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

“இந்த ஆண்டு புதிய நடைமுறைகளோடும் கட்டுப்பாடுகளோடும் அதே வேளையில் உற்சாகம் குறையாமலும் மலேசியக் குடும்பத்தின் ஒரு பகுதியினராகிய இந்துப் பெருமக்கள் தீபாவளியைக் கொண்டாடுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த வகையிலேயே திறந்த இல்ல உபசரிப்புகளையும் அவர்கள் நடத்த வேண்டும். மலேசியக் குடும்பத்தின் சிறப்புக் குணமும் உணர்வும் இதுதான். ஒவ்வொரு பெருநாளும் நமக்குள் இருக்கும் ஒற்றுமையையும் தொடர்புகளையும் வலுப்படுத்தும் ஓர் அருமையான வாய்ப்பாகும். எனவே நம்மிடையே இருக்கும் இன ஒற்றுமையை நாம் வலுப்படுத்திக் கொள்ளும் நல்வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொள்வோம். அதே வேளையில் எப்போதும் நமது சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்வோம்” என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி குறிப்பிட்டார்.


#TamilSchoolmychoice

Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்:https://t.me/selliyal