Home 13வது பொதுத் தேர்தல் வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு வேட்பாளர்கள் பின் வாங்கமுடியாது – வான் ஓமார்

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு வேட்பாளர்கள் பின் வாங்கமுடியாது – வான் ஓமார்

664
0
SHARE
Ad

Wan Ahmad Wan Omar,கோலாலம்பூர், ஏப்ரல் 23 – வேட்புமனு தாக்கல் செய்த பிறகு வேட்பாளர்கள் தங்கள் நிலையிலிருந்து பின்வாங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவேளை அவர்கள் பின்வாங்குவதாக இருந்தாலும், தேர்தலின் போது அவர்கள் பெயரும் வாக்குப்பெட்டியில் இடம்பெறும்  என்று தேர்தல் ஆணையத்தின் துணைத்தலைவர் டத்தோ வான் அகமத் ஓமார் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஓமார் கூறுகையில், “வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு அடுத்த மூன்று நாட்களுக்குள் வேட்பாளர்கள் விலகும் பட்சத்தில் அவர்கள் பெயர் தேர்தலில் இடம் பெறாது என்ற பழைய விதிகள் இப்போது அகற்றப் பட்டுவிட்டன.

இப்போது உள்ள புதிய விதியின் படி, வேட்பாளர் விலக நேர்ந்தாலும் அவரது பெயர் வாக்குப்பெட்டிகளில் நிச்சயம் இடம்பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் ஜ.செ.க கட்சியின் மூத்த உறுப்பினரான சிம் டோங் ஹிம், கோத்தா லக்சமணா சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குவதிலிருந்து பின் வாங்குவதாக அறிவித்தது குறித்து கேட்டதற்கு,

“அது அவர்களது கட்சி சம்பந்தப்பட்ட விஷயம். சிம் ஜ.செ.க சார்பாக கோத்தா மெலாக்கா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அத்துடன் கோத்தா லக்சமணா சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக களமிறங்குகிறார். அவரது இரு தொகுதிகளுக்கான வேட்புமனு ஏற்கனவே அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. எனவே அதுவே இறுதி முடிவு” என்று ஓமார் தெரிவித்தார்.