Home நாடு மூடா கட்சி ஜோகூரில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது

மூடா கட்சி ஜோகூரில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது

604
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : ஜசெக, அமானா கட்சியுடன் தொகுதி உடன்பாடு கண்டிருக்கும் மூடா கட்சி ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதற்கான தேர்தல் உடன்பாடு நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 9) கையெழுத்தானது.

இதன் மூலம் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி மேலும் அதிகமான வாக்குகளை ஜோகூரில் பெற நம்பிக்கைக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் மூடா 10 தொகுதிகளுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறது என்பதை அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டாக்டர் மதன் மறுத்திருக்கிறார்.

6 தொகுதிகளுக்கான உடன்பாட்டை பக்காத்தான் ஹாரப்பானுடன் கண்டிருக்கும் மூடாவின் தலைவர் சைட் சாதிக் ஜோகூரைச் சேர்ந்தவர் என்பதால் மூடா ஒரு வலிமையான சக்தியாக ஜோகூர் தேர்தலில் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.