Home நாடு ஜோகூர் : புத்ரி வங்சா தொகுதியில் மூடா போட்டி

ஜோகூர் : புத்ரி வங்சா தொகுதியில் மூடா போட்டி

775
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பக்காத்தான் ஹாரப்பானுடன் கூட்டணி அமைத்திருக்கும் மூடா கட்சிக்கு மொத்தமுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

புத்ரி வங்சா சட்டமன்றத் தொகுதி மூடாவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில் ஒன்றாகும். தெப்ராவ் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் இரண்டு தொகுதிகளில் புத்ரி வங்சா ஒன்றாகும்.

இந்தத் தொகுதியில் 2018-இல் பெர்சாத்து கட்சி பக்காத்தான் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. 24,959 வாக்குகள் பெரும்பான்மையில் இந்தத் தொகுதியைப் பக்காத்தான் கைப்பற்றியது.

#TamilSchoolmychoice

அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளர் 12,586 வாக்குகள் மட்டுமே பெற்று இந்தத் தொகுதியில் தோல்வியடைந்தார்.

பெர்சாத்து சார்பில் வெற்றி பெற்ற மஸ்லான் பின் பூஜாங் அண்மையில் அந்தக் கட்சியில் இருந்து விலகினார். அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கும் தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்தார். அவருக்கு மீண்டும் அங்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்பது இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.

2018 புள்ளிவிவரங்களின்படி 39 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும், 50 விழுக்காடு சீன வாக்காளர்களையும், 10 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் கொண்டிருக்கிறது. மற்ற வாக்காளர்கள் ஒரு விழுக்காட்டினர்.

தெப்ராவ் நாடாளுமன்றத்தின் கீழ் வரும் 2 தொகுதிகளில் மற்றொன்று திராம் சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதியில் பிகேஆர் கட்சி வெற்றி பெற்றது.

2018-இல் தெப்ராவ் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிட்ட சூங் ஷியாவ் யூன் வெற்றி பெற்றார்.