Home நாடு லோ சியூ ஹோங், 3 குழந்தைகளுடன் 1 மணி நேரம் செலவிட்டார்

லோ சியூ ஹோங், 3 குழந்தைகளுடன் 1 மணி நேரம் செலவிட்டார்

496
0
SHARE
Ad
லொ சீயூ ஹோங்

கங்கார் : லோ சியூ ஹோங் என்ற தாயின் சோகமும், அதிர்ச்சியும் கலந்த கதை கடந்த சில நாட்களாக மலேசியர்களின் அனைத்துத் தரப்புகளையும் நெகிழச் செய்துள்ளது.

அவரின் முன்னாள் கணவன் நாகேஸ்வரன் முனியாண்டி அவர்களுக்குப் பிறந்த 3 குழந்தைகளையும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்திச் சென்று ஒருதலைப் பட்சமாக இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்துள்ளார். தற்போது அந்தப் பிள்ளைகள் மூவரும் பெர்லிஸ் மாநிலத் தலைநகர் கங்காரில் உள்ள சமூக நல விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை தன் குழந்தைகளைப் பார்க்க லோ சியோ ஹோங்கிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், இன்று அவருக்கு குழந்தைகளைப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

சுமார் 1 மணிநேரம் அவர் தன் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டார்.

அந்தக் குழந்தைகளில் இருவர் பெண்கள் – 14 வயதான இரட்டையர் ஆவர். மூன்றாமவர் 10 வயது மகனாவார்.

“அவர்கள் என்னைப் பார்த்ததும் உற்சாகமடைந்து என்னுடனேயே வரலாமா எனக் கேட்டார்கள். நான் என்னுடைய கெந்திங் ஹைலண்ட்ஸ் வேலை செய்யும் இடத்தின் புகைப்படத்தை அவர்களிடம் காட்டினேன். அவர்கள் நாங்களும் அங்கே வரலாமா? எனக் கேட்டனர்” என லோ சியூ ஹோங் தெரிவித்தார்.