Home நாடு ஜோகூர் : பிகேஆர் வேட்பாளர்களில் 2 இந்தியர்கள்

ஜோகூர் : பிகேஆர் வேட்பாளர்களில் 2 இந்தியர்கள்

917
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : மெல்ல மெல்ல சூடு பிடித்து வரும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பிகேஆர் கட்சி சார்பில் இதுவரையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 2 பேர் இந்தியர்களாவர்.

மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 20 சட்டமன்றத் தொகுதிகள் பிகேஆர் கட்சிக்கு பக்காத்தான் ஹாரப்பான் தேர்தல் உடன்பாட்டின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதில் 3 தொகுதிகளை மூடா கட்சிக்கு பிகேஆர் ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சிய தொகுதிகளில் பிகேஆர் வேட்பாளர்கள் கட்டம் கட்டமாக அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

திராம் சட்டமன்றத் தொகுதியில் கோபாலகிருஷ்ணன்

#TamilSchoolmychoice

திராம் சட்டமன்றத் தொகுதியில் கோபாலகிருஷ்ணன் நிறுத்தப்படுகிறார். இவர் 2018-இல் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவராவார்.

தெப்ராவ் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 2 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று திராம். மற்றொரு தொகுதி புத்ரி வங்சா ஆகும்.

கடந்த பொதுத் தேர்தலில் திராம் தொகுதியை 8,098 வாக்குகள் பெரும்பான்மையில் கோபாலகிருஷ்ணன் கைப்பற்றினார்.

2018 கணக்கெடுப்பின்படி, 57 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களையும், 29 விழுக்காட்டு சீன வாக்காளர்களையும் 13 விழுக்காட்டு இந்திய வாக்காளர்களையும் கொண்ட தொகுதி திராம். மற்ற வாக்காளர்கள் 2 விழுக்காட்டினர்.

பூலோ காசாப் தொகுதியில் சுப்பிரமணிசாமி

புதியவரான சுப்பிரமணிசாமி பூலோ காசாப் சட்டமன்றத் தொகுதியில் நிறுத்தப்படுகிறார். இவர் பாகோ பிகேஆர் தொகுதியின் தலைவராவார்.

சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 2 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பூலோ காசாப். கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் அம்னோ வெற்றிகரமாக இந்தத் தொகுதியைத் தற்காத்து வந்திருக்கிறது.

57 விழுக்காட்டு மலாய் வாக்காளர்கள், 30 விழுக்காட்டு சீன வாக்காளர்கள், 13 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் இந்தத் தொகுதியில் 2018 கணக்கெடுப்பின்படி இருக்கின்றனர்.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் அம்னோவின் சாஹாரி பின் சாரிப் இந்தத் தொகுதியில் 877 வாக்குகள் பெரும்பான்மையில் மட்டுமே வெற்றி பெற்றார்.