Home நாடு அக்கினி சுகுமார் நினைவு அறிவியல் சிறுகதைப் போட்டி – 2022

அக்கினி சுகுமார் நினைவு அறிவியல் சிறுகதைப் போட்டி – 2022

823
0
SHARE
Ad

  • அக்கினி சுகுமார் நினைவு அறிவியல் சிறுகதைப் போட்டி – 2022
  • வல்லினம் இயக்கம் நடத்துகிறது
  • முதல் பரிசு 2 ஆயிரம் ரிங்கிட்

அக்கினி சுகுமார் மலேசிய புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவர். மலேசியாவின் மூத்த பத்திரிக்கை ஆசிரியராகத் தன் பணியை ஆற்றினாலும் சமகால புனைவு குறித்தும் அதன் போக்குகள் குறித்தும் தன் இறுதி காலம் வரை அக்கறையுடன் கவனித்தவர்.

அவரின் கட்டுரைகள் மலேசிய இலக்கியச் சூழலில் அதிகம் கவனம் பெற்றவை. வறண்டிருந்த கட்டுரை மொழியை இவரது எழுத்து நடை நவீனமாக்கியது. ஈர்ப்பான அவர் மொழியில் தொடர்ந்து வெளிவந்த அக்கினியின் அறிவியல் அறிமுகக் கட்டுரைகள், பல இளைஞர்களுக்கு அறிவியலின் பால் ஈர்ப்பை ஏற்படுத்தின. எளிய உவமைகள், நெருக்கமான உதாரணங்கள் வழி அக்கினி சுகுமார் அவர்கள் அறிவியல் கட்டுரை துறையில் ஒரு சாதனை படைத்தார் என்றே கூறலாம்.

#TamilSchoolmychoice

அக்கினி சுகுமார் நினைவாக ‘அறிவியல் சிறுகதைப் போட்டி’ நடத்த வல்லினம் முன்வந்துள்ளது. அந்த போட்டிகளை ஈராண்டுக்கு ஒரு முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான பரிசுத் தொகையை அக்கினி சுகுமார் குடும்பம் மற்றும் வல்லினம் ஏற்றுக்கொள்ளும்.

பரிசு விபரங்கள் பின்வருமாறு:

முதல் பரிசு : 2000.00 ரிங்கிட்

இரண்டாவது பரிசு : 1500.00 ரிங்கிட்

மூன்றாவது பரிசு : 1000.00 ரிங்கிட்

இந்தச் சிறுகதைப் போட்டியை ஒட்டிய அறிமுகமும் பட்டறையும் வல்லினம் வழி முன்னெடுக்கப்படும். இந்த அமர்வு அறிவியல் புனைக்கதைகளின் கூறுகளையும் நீதிபதிகளின் தேர்வு எதன் அடிப்படையில் அமைந்திருக்கும் என்றும் பங்கேற்பாளர்களுக்குத் தெளிவாக விளக்கும். இந்தச் சந்திப்பில் பங்கெடுக்க முன்கூட்டியே பதிவு செய்தல் அவசியம். அதற்கான இணைப்பு:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeS-LfL5GEfi1xWnorJsX8ohlVKIHHFkS_uYhhBaKDuFTDegQ/viewform

இம்மாதம் (மார்ச் 2022) தொடங்கும் இந்தப் போட்டிக்கான கதைகளை ஜூன் 30-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இறுதிச்சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் குறித்த அறிவிப்பு ஜூலை வல்லினத்தில் அறிவிக்கப்படும்.

பிற விதிமுறைகள்:

1. போட்டியில் மலேசியப் பிரஜைகள், வயது வரம்பின்றி கலந்துகொள்ளலாம்.

2. போட்டியில் பங்கு பெறும் கதைகள் பக்க வரையறைக்கோ சொற்களுக்கோ கட்டுப்பட்டதல்ல.

3. அறிவியல் கூறுகள் இருந்தால் மட்டுமே போட்டியில் கதைகள் இணைத்துக்கொள்ளப்படும். புனைவில் அறிவியல் கூறுகள் என்பது குறித்த தெளிவுகள் பட்டறையில் விளக்கப்படும்.

4. பட்டறை 26.3.2022- சனிக்கிழமை இரவு மணி ஏழுக்கு நடத்தப்படும்.

5. போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும் சிறுகதைகள், இதற்கு முன் எந்த ஊடகத்திலும் பிரசுரிக்கப்பட்டிருக்கக் கூடாது; முடிவை அறிவிக்கும் வரை வேறெங்கும் பிரசுரிக்கவும் கூடாது.

6. அனுப்பப்படும் சிறுகதை படைப்பாளரின் சொந்தக் கற்பனையாக இருக்க வேண்டும்.

7. அனுப்பப்படும் சிறுகதை தழுவலாகவோ மொழிப்பெயர்ப்பாகவோ ஏற்கனவே பிரசுரம் கண்டதாகவோ இருந்தால் உடனடியாக போட்டியில் இருந்து நீக்கப்படும்.

8. பரிசு பெறும் சிறுகதைகளை அச்சு வடிவிலும் கிண்டில் புத்தகமாகவும் பதிப்பிக்கும் உரிமை வல்லினம் பதிப்பகத்திற்கு உண்டு. இதற்காக எவ்வித உரிமத்தொகையும் எழுத்தாளருக்கு வழங்கப்படாது.

9. எழுத்தாளர்கள் தங்கள் சொந்த சிறுகதை தொகுப்புகளில் போட்டியில் வென்ற கதையை இணைத்துக்கொள்ளத் தடையில்லை.

10. ஜூன் 30-க்குள் அனுப்பப்பட்ட கதைகளே போட்டிகளில் இணைத்துக்கொள்ளப்படும்.

11. சிறுகதையை யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

12. ஒருவர் எத்தனை சிறுகதை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

13. போட்டிக்கான படைப்புகளை vallinamariviyal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

14. நீதிபதிகளின் முடிவே இறுதியானது.

இந்தப் போட்டி தொடர்பான மேல்விவரங்களுக்கு பின்வரும் இணைப்பை அணுகவும்:

https://vallinam.com.my/version2/?p=8264