Home நாடு மூடா வெற்றி பெற்ற ஒரே தொகுதி புத்ரி வங்சா!

மூடா வெற்றி பெற்ற ஒரே தொகுதி புத்ரி வங்சா!

1090
0
SHARE
Ad
அமீரா அய்ஷா அப்துல் அசிஸ்

ஜோகூர் பாரு : நடந்து முடிந்த ஜோகூர் தேர்தலில் மூடா கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது.   மூடாவின் தலைமைச் செயலாளர் அமிராவு அய்ஷா அப்துல் அசிஸ் புத்ரி வங்சா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

மூடா போட்டியிட்ட 7 தொகுதிகளில் ஒன்று புத்ரி வங்சா. இந்தத் தொகுதியை அமானா, மூடாவுக்காக பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் விட்டுக் கொடுத்த தொகுதியாகும்.

6 முனைப் போட்டியில் புத்ரி வாங்சா தொகுதியைக் கைப்பற்றியிருக்கிறார் அமிரா அய்ஷா. அவருக்கு 22,884 வாக்குகள் கிடைத்தன. 7,114 வாக்குகள் பெரும்பான்மையில் அவர் வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

2018 பொதுத்தேர்தலில் இந்தத் தொகுதியில் பெர்சத்து கட்சியின் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக மஸ்லான் பின் பூஜாங் போட்டியிட்டு 24,959 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிபெற்றார். பின்னர் பெர்சாத்து
உடைந்தபோது மொஹிதின் யாசின் பக்கம் சாய்ந்தார் மஸ்லான். கடந்த ஜனவரியில் பெர்சாத்து கட்சியிலிருந்தே வெளியேறினார் மஸ்லான்.

தெப்ராவ் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 2 தொகுதிகளில் ஒன்று புத்ரி வங்சா. மற்றொரு தொகுதி தீராம்.

இந்த முறை புத்ரி வங்சா, பக்காத்தான் கூட்டணியின் கீழ் அமானாவுக்கே வழங்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் மூடாவுக்கும் பக்காத்தான் கூட்டணி கட்சிகளான ஜசெக, அமானா கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட தேர்தல்
உடன்பாட்டினால் மூடாவுக்கு அமானா விட்டுக்கொடுத்த 4 தொகுதிகளில் ஒன்று புத்ரி வங்சா. தெனாங், புக்கிட் கெப்போங், பாரிட் ராஜா ஆகிய மூன்றும் அமானா மூடாவுக்காக விட்டுக் கொடுத்த மற்றத் தொகுதிகளாகும்.

மாச்சாப், புக்கிட் பெர்மாய் தொகுதிகளை ஜசெக மூடா விட்டுக் கொடுத்தது. ஆக, இந்த 2 கட்சிகளும் விட்டுக் கொடுத்திருக்கும் 6 தொகுதிகளில் மூடா
போட்டியிட்டது.

6 முனைப் போட்டியை எதிர்நோக்கிய புத்ரி வங்சா தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் மசீசவின் இங் இயூ எய்க், பெரிக்காத்தான் நேஷனல் சார்பாக கெராக்கானின் லோ கா யோங், பெஜுவாங் கட்சியின் சார்பாக டாக்டர் கைரில் அன்வார் ரஸாலி ஆகியோர் போட்டியிட்டனர்.

புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பார்ட்டி பங்சா மலேசியா கட்சியின் சார்பில் ஸ்டீவன் சூங் போட்டியிட்டார்.

முதல் தடவையாக தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு ஒரே ஒரு சட்டமன்றத்தில் வெற்றி பெற்று மூடா கட்சியின் சட்டமன்ற அரசியலைத் தொடக்கி வைத்திருக்கிறார் அமிரா அய்ஷா.