Home நாடு “இஸ்லாம் பற்றி இனி எழுதமாட்டேன்” – ஒரு நாள் தடுப்புக் காவலுக்குப் பின்னர் உதயசங்கர் கூறுகிறார்

“இஸ்லாம் பற்றி இனி எழுதமாட்டேன்” – ஒரு நாள் தடுப்புக் காவலுக்குப் பின்னர் உதயசங்கர் கூறுகிறார்

956
0
SHARE
Ad

ஷா ஆலாம் : சனிக்கிழமை ஏப்ரல் 9) கைது செய்யப்பட்டு ஒரு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட உதயசங்கர் எஸ்பி இன்று மாலையில் விடுதலை செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து இஸ்லாம் மதத்தைப் பற்றி இனி எழுதமாட்டேன் என அவர் தெரிவித்திருக்கிறார். “நான் இஸ்லாம் குறித்து நிறைய படித்திருக்கிறேன். ஆனால் என்னுடைய பாடத்தை நான் படித்து விட்டேன். இஸ்லாம் குறித்து எதுவும் எழுதமாட்டேன். அதிலிருந்து விலகி இருப்பேன். அதுதான் நல்லது” என உதய சங்கர் தெரிவித்தார்.

நேற்றிரவு அவர் டாங் வாங்கி காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு ஓர் இரவைக் கழித்தார். அவரை 4 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கும் காவல் துறையின் விண்ணப்பத்தை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்தது. அதைத் தொடர்ந்து அவர் இன்று பிற்பகலில் விடுதலை செய்யப்பட்டார்.

உதயகுமார் கைது ஏன்?

#TamilSchoolmychoice

காவல் துறையினர் தன்னை நல்ல முறையில் நடத்தினர் என்றும் உதயகுமார் தெரிவித்தார். தடுப்புக் காவல் அறை (லோக்அப்) தூய்மையுடன் இருந்ததாகத் தெரிவித்த உதயகுமார் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் முறையானதாக இருந்தன எனக் குறிப்பிட்டார்.

மலாய் மொழியிலும், தமிழிலும் நன்கு அறிமுகமான எழுத்தாளர் உதயசங்கர் எஸ்பி திங்கட்கிழமை (ஏப்ரல் 11) ஷா ஆலாமில் கைது செய்யப்பட்டார்.

அவரின் சமூக ஊடகப் பதிவில் அவர் நபிகள் நாயகத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

குற்றவியல் சட்டம் 298A பிரிவு மற்றும் தொடர்பு பல்ஊடக சட்டம் 1998-இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் அவர் விசாரிக்கப்படுகிறார். சமூகத்தில் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதை இந்த சட்டங்கள் குற்றமாக்குகின்றன. தொடர்பு சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதையும் இந்த சட்டங்கள் குற்றமாக்குகின்றன.

சர்ச்சைக்குரிய அந்த சமூக ஊடகப் பதிவு ஏப்ரல் 7-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டது.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு இலாகாவின் இயக்குநர் அப்துல் ஜாலில் ஹாசான், 50 வயதான உதயசங்கர் ஷா ஆலாம் தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள அவரின் இல்லத்தில் திங்கட்கிழமை காலை 11.15 மணியளவில் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

அவரின் சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட அவரின் ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.