Home உலகம் உக்ரேன் பொதுமக்களை நோக்கி ரஷியா தாக்குதல்

உக்ரேன் பொதுமக்களை நோக்கி ரஷியா தாக்குதல்

929
0
SHARE
Ad

கீவ் (உக்ரேன்) : உக்ரேன் மீதான ரஷியாவின் போர் தணிந்திருப்பதாகத் தகவல்கள் வெளிவரத் தொடங்கிய நிலையில், மீண்டும் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உக்கிரமானத் தாக்குதலை ரஷியா தொடுத்திருக்கிறது.

மரியுபோல் என்ற நகரில் உள்ள இரும்புத் தொழிற்சாலை ஒன்றில் அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்களை நோக்கி ரஷிய இராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

கிழக்கு உக்ரேனில் உள்ள டோன்பாஸ் பிரதேசத்தைக் கைப்பற்ற ரஷியப் படைகள் மேலும் தீவிரமாக போராடி வருகின்றன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் உக்ரேன் படைகளும் சரணடைய மறுத்து கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) உக்ரேனின் பல நகர்களில் ரஷியா வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது. பதிலுக்கு உக்ரேனும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தது.

ரஷியா மிகக் கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது என்றும் மனிதாபிமானமற்ற முறையில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடத்துகிறது என்றும் உக்ரேனிய அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி சாடியுள்ளார்.