Home நாடு “நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவி, நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவோம்” – சரவணன் வாழ்த்துச் செய்தி

“நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவி, நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவோம்” – சரவணன் வாழ்த்துச் செய்தி

734
0
SHARE
Ad

மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ரமலான் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்.

கடந்த இரண்டு வருடமாக கொரோனா தாக்கத்தால் சுதந்திரமாக இந்த ஈகைத் திருநாளைக் கொண்டாட முடியாத சூழல் இருந்தது. இந்த வருடம் வழக்கம்போல் குடும்பத்தோடும், உற்றார் உறவினரோடும், நண்பர்களோடும் கொண்டாட முடியும் என்பதே மிகப் பெரிய கொண்டாட்டம்தான்.

நோன்புக் கடமையை முழுமையாக முடித்து மன நிறைவோடு, இந்த வருடம் அனைத்து முஸ்லீம் அன்பர்களும் புனித ரமலான் பெருநாளைக் கொண்டாட மனமார வாழ்த்துகிறேன்.

#TamilSchoolmychoice

நோன்புப் பெருநாளின் தார்மீகக் கொள்கையே, தான தர்மத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். எனவே இந்த கொரோனா பாதிப்பால் வேலையிழந்தவர்கள், வருமானம் இழந்தவர்களையும் இந்த பெருநாள் கொண்டாட்டத்தில் நாம் அரவணைத்துக் கொள்வோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வோம். பிறருக்கு உதவக் கூடிய சூழலில் நாம் இருக்கிறோம் என்றால் அது இறைவன் நமக்கு வழங்கிய பாக்கியம்.

மே 1 முதல் தொடங்கும் குறைந்த பட்ச சம்பளம், 1,500 ரிங்கிட் பல தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக அமையும். குறிப்பாக அன்றாட வாழ்க்கையின் செலவினங்களைக் கையாள இலகுவாக அமையும்.

பல முதலாளிமார்களுக்கு இது சுமையாகத் தெரிந்தாலும், 1500 ரிங்கிட்டில் வாழ்க்கையை நடத்த முடியுமா என்பதே கேள்விக்குறிதான். இதை மனிதத்தோடு நாம் பார்க்க வேண்டும். ஆகவே நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போம்.

முஸ்லீம் நண்பர்களுக்கு மீண்டும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்

அன்புடன்,

டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்
மனிதவள அமைச்சர்
ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்