Home அரசியல் “இந்திய சமுதாயம் தன்மானமுடையது என்பதனை அம்னோவிற்கு உணர்த்துவோம்” – சேவியர் ஜெயகுமார் அறைகூவல்

“இந்திய சமுதாயம் தன்மானமுடையது என்பதனை அம்னோவிற்கு உணர்த்துவோம்” – சேவியர் ஜெயகுமார் அறைகூவல்

660
0
SHARE
Ad

ஏப்ரல் 24 – “நாளிதழ்களில் இந்தியச் சமுதாயம்  சூல்கிப்ளி நோர்டினை ஏற்றுக் கொண்டு விட்டது என்று பிரதமர் கூறியுள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவுள்ளது. ஒரு தனி நபர்  சூல்கிப்ளி நோர்டினை கட்டி தழுவிக் கொண்டதால் அது சூல்கிப்ளி நோர்டினை  இந்தியச் சமுதாயமே ஏற்றுக் கொண்டதாக அர்த்தமாகாது. அத்துடன் வேதமூர்த்தி பாரிசானுடன் தேர்தல் பிரகடனம்  செய்துகொண்டதும், இந்திய சமுதாயமே அதனை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமாகாது” என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற தொகுதிக்கு பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிடுபவருமான டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

Xavier-Jeyakumar-Sliderபத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையொன்றில் சேவியர் பின்வருமாறு மேலும் தெரிவித்தார்:-

#TamilSchoolmychoice

பிரதமரின் இந்த அறிக்கை, அவர் இந்தியச் சமுதாயத்தின்  ஏமாளித்தனம் மீது எவ்வளவு  நம்பிக்கையுடையவராக இருக்கிறார் என்பதனைக் காட்டுகிறது. கடந்த காலங்களில் பாரிசான் பங்காளித்துவம் என்ற போர்வையில் அம்னோ என்ற தனது பிள்ளையை ஊட்டி வளர்த்ததால் இன்று ம..கா மட்டும்  நோஞ்சானாகவளராமல், இந்தியச் சமுதாயத்தையே படும் பாதாளத்தில்  தள்ளிவிட்டிருப்பதை  மக்கள் நன்கு உணர்ந்து விட்டனர்.”

இந்நாட்டில் இந்திய,சீன இனங்களை  சூல்கிப்ளி நோர்டின் ஏளனம் செய்யலாம் இந்து, கிருஸ்துவ மதங்களை கேலி பேசலாம், இந்நாட்டில் சீன, தமிழ்ப்பள்ளிகள் உயிர் வாழ சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று கூறலாம். நமது பண்பாட்டை எவ்வளவு கேவலமாகச் சித்தரிக்க முடியுமோ அதையும் செய்யலாம், அவர்மீது நூற்றுக்கணக்கான போலீஸ்  புகார்கள் கொடுத்தாலும், சட்டம் சும்மா இருக்கும்.”

அவரின்  கேலிக்கிண்டலை அங்கீகரித்துப் பிரதமர் அவருக்கும், அவரின் தலைவர்  இப்ராஹிம் அலிக்கும்  நாடாளுமன்றச் சீட் தருவார்.”

ஷா ஆலாம்  செக்சன் 19 மகா மாரியம்மன் ஆலயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெட்டிய மாட்டுத் தலையுடன் தன்  சகோதரனைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்த  அமாட் நவாவிக்கு  பத்துதீகா சட்ட மன்றச் சீட் தருவார். அதனையும் இந்தச் சமுதாயம் ஏற்று கொண்டு வாக்களிக்க வேண்டும்.”

இப்படிப்பட்டவர்களைநாடாளுமன்றச் சட்டமன்ற உறுப்பினர்களாகப் போடுவதே தப்பு, அவர்களுக்குக்  கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டும் அவர்களின் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக இருக்கும், இது ஷா ஆலாம் போன்ற படித்தவர்கள் உள்ள தொகுதிகளில் இனத் தீவிரவாதிகளை வைத்து, அம்னோவின் செல்வாக்கைச் சோதிக்கும் செயல்.”

என்றும் சேவியர் தனது பத்திரிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

 இந்திய சமுதாயத்தின் தன்மானத்திற்கு சோதனை

துன் மகாதீர் போன்ற ஒரு தீவிர வாதியை இந்த நாடு வளர விட்டதால், இந்தியச் சமுதாயம் எல்லாவற்றிலும்  50 ஆண்டுகள் பின் தங்கி விட்டது. இன்று பிரதமர் நஜிப் மூன்று தீவிரவாதிகளுக்கு இடமளித்து இந்தியச் சமுதாயம்  அவர்களை ஏற்றுக்கொள்ளும் என்று கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல்  பாய்ச்சிவது போல்  இருக்கிறது

இவர்கள் தப்பித் தவறி நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ அனுப்பப்பட்டால், அவர்களின் இன வாத அணுகு முறைகளை அனைவரும்  ஏற்றுக்கொண்டதாகத் தானே  அர்த்தப்படும். அவர்கள் நாடாளுமன்றத்தில்  இன்னும் துணிவாக இனவாதத்தைப் பேசமாட்டார்களா என்பதனை  அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.”

கடந்த 56 ஆண்டுகால ஆட்சியில் இந்தியச் சமுதாயத்திடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டார்கள், இனிப் பறிக்க நம்மிடம் ஏதுமில்லை என்று எண்ணியிருந்த இச் சமுதாயத்தின் தன்மானத்திற்கு இப்போது சோதனை வைத்துள்ளார் பிரதமர்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சேவியர் “இச்சமுதாயத்தில் அனைவரும் தன்மானத்தை விற்று விட்டார்களா? இன்னும் எத்தனை பேர் பணம் காசுகளுக்கு அடிமையாகாமல் சுயமரியாதையுடன் இருக்கிறார்கள்  என்று   நோட்டமிடுகிறாரா பிரதமர்?” என்றும் சேவியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 இந்தியச் சமுதாயம் உணர்வை மட்டும் கொண்டதல்ல தன்மானமுள்ள சமுதாயம் என்று பாரிசானுக்கு உணர்த்துவோம். இந்த முறை சூல்கிப்ளி நோர்டினை  மட்டுமல்ல இப்ராஹிம்  அலிக்கும்  அமாட் நவாவிக்கும் ஒட்டு மொத்தப் பாரிசானுக்கே எங்களின் தன்மான உணர்வைக் காட்டுவோம்என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.