Home நாடு இன்று செகாமாட்டில் அன்வார் இப்ராகிம் உரை நிகழ்த்தும் மாபெரும் பொதுக் கூட்டம்

இன்று செகாமாட்டில் அன்வார் இப்ராகிம் உரை நிகழ்த்தும் மாபெரும் பொதுக் கூட்டம்

575
0
SHARE
Ad

Anwar-slider--ஏப்ரல் 24 – 13வது பொதுத் தேர்தலில் அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ள செகாமாட் தொகுதியில் போட்டியிடும் பிகேஆர் வேட்பாளர் டத்தோ சுவா ஜூய் மெங்கிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய இன்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் களம் இறங்குகின்றார்.

இன்று இரவு 8.30 மணியளவில் கம்போங் அப்துல்லா விளையாட்டுத் திடலில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் அன்வார் இப்ராகிம் உரையாற்றவிருக்கின்றார்.

மக்கள் கூட்டணியின் மற்ற தலைவர்களும் இந்த கூட்டத்தில் உரையாற்றவிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர்களுள் ஒருவரான சுவா ஜூய் மெங் போட்டியிடும் செகாமாட் தொகுதியில் அவருக்கு ஆதரவு பெருகி வருகின்றது.

குறிப்பாக ம.இ.கா வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் இந்திய வாக்காளர்களிடமிருந்து ம.இ.கா வேட்பாளர்கள் பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகின்றனர்.

சுல்கிப்ளி நோர்டின், இப்ராகிம் அலி, ஹிண்ட்ராப்-நஜிப் ஒப்பந்தம் போன்ற பிரச்சனைகளால் கொந்தளித்துக் கிடக்கும் இந்திய சமுதாய வாக்காளர்கள் தங்களின் எதிர்ப்பைக் காட்ட தேசிய முன்னணிக்கு எதிராக திரண்டு வந்து வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் இன்று அன்வார் இப்ராகிமின் பேருரைக்குப் பின் செகாமாட்டில் உள்ள இந்திய வாக்காளர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களின் ஆதரவும் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக திசை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் விவரங்கள் வேண்டுவோர் பின்வரும் ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொள்ளலாம்:-

மது – 019-7947108

நாகராஜூ – 012-7271700

மூர்த்தி – 019 – 7627117