Home நாடு சரவணன் புதிய திருமண மண்டபத்தைத் திறந்து வைத்தார்

சரவணன் புதிய திருமண மண்டபத்தைத் திறந்து வைத்தார்

745
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று ஞாயிற்றுக்கிழமை மே 22-ஆம் தேதி எஸ்.கே.சாய் பிரதர்ஸ் (SK Sai Brothers) என்ற புதிய திருமண மண்டபத்தைத் திறந்து வைத்தார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பாங்கி நகரில் பண்டார் பாரு பாங்கி என்ற வட்டாரத்தில் இந்தப் புதிய திருமண மண்டபம் அமைந்திருக்கிறது.

இந்த மண்டபத்தின் உரிமையாளர் சி.ஆர்.கார்த்திக்குக்கு அவரின் முயற்சிகளுக்கு சரவணன் வாழ்த்து தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“எல்லா வகையான திருமண ஏற்பாடுகளுக்கு ஒரே தீர்வாக அமையும் எஸ்.கே.சாய் பிரதர்ஸ் திருமண மண்டபம் திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். சி.ஆர். கார்த்திக் எனும் இளைஞர் தவணை முறையில் பணம் செலுத்தும் திட்டத்தை ஏற்படுத்தி கடந்த 7 வருடங்களாகத் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்கும் தொழில் செய்து வருகிறார். தற்போது சொந்தமாக ஒரு மண்டபம் திறப்பு விழா காணும் அளவிற்கு அவரது தொழில் முன்னேற்றம் அடைந்துள்ளது. விடாமுயற்சியும், உழைப்பும் இருந்தால் எந்தத் தடைகளையும் தகர்க்கலாம் என்பதற்கு நல்ல உதாரணம் கார்த்திக். அவரது வணிகத்திட்டம், சமுதாயத்தில் உள்ள வசதி குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மனம் நெகிழும் அளவிற்கு ஒரு மணமக்களுக்கு இலவசமாகத் திருமணமும் ஏற்பாடு செய்திருந்தார். இப்படி இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருவது பாராட்டுக்குரியது” என சரவணன் தெரிவித்தார்.

“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் பிறரிடத்தில், ஒழுங்காய் பாடு படு, உயரும் உன் மதிப்பு..” என்றும் சரவணன் குறிப்பிட்டார்.

அந்த நிகழ்ச்சியின் படக்காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: