Home நாடு கட்சித் தாவல் தடை சட்டத்திற்கு ஆதரவு பெருகுகிறது

கட்சித் தாவல் தடை சட்டத்திற்கு ஆதரவு பெருகுகிறது

801
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பொதுத் தேர்தல் விரைந்து நடத்தப்பட வேண்டும் என அம்னோ-தேசிய முன்னணி அறைகூவல் விடுத்து வரும் நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டமும் விரைந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.

நாட்டின் அரசியல் சூழல் மோசமடைந்ததற்குக் காரணம்  முறையான விதிமுறைகளைக் கொண்ட கட்சித் தாவல் சட்டம் இதுவரையில் நம் நாட்டில் அமுல்படுத்தப்படாததுதான்!

அண்மையில் அம்பாங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சுரைடா கமாருடின் பெர்சாத்துவில் இருந்து விலகி பிபிஎம் என்னும் பார்ட்டி பங்சா பெர்சாத்துவில் இணைந்தார்.

#TamilSchoolmychoice

சில நாட்களுக்கு முன்னர், வாரிசான் கட்சியிலிருந்து சபா சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் கட்சி மாறியிருக்கிறார்.

2018 பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் தேர்ந்தெடுத்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வேறு வேறு கட்சிகளில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள்.

இதுபோன்ற கட்சித் தாவல்கள் மேலும் தொடராமல் இருப்பதற்கும் கட்சித் தாவல் சட்டம் நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.

கட்சித் தாவல் சட்டத்தின் நகல் வரைவு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படத் தயாராக இருப்பதாக சட்டத் துறை அமைச்சர் வான் ஜூனாய்டி அறிவித்திருக்கிறார்.

பல அரசியல் ஆய்வாளர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொது அமைப்புகளும்கூட கட்சித் தாவல் தடைச் சட்டத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.