Home நாடு ‘மலையகத்தொகை’ வெளியீட்டு விழா & இலக்கிய விழா

‘மலையகத்தொகை’ வெளியீட்டு விழா & இலக்கிய விழா

975
0
SHARE
Ad

கோலாலம்பூர் : டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களால் உருவான ப.இராமு அறக்கட்டளை ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபு கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பின்வருமாறு நடைபெறவிருக்கிறது:

நாள் : 12 ஜூன் 2022 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : பிற்பகல் 2 மணி
இடம் : செந்தூல் செட்டியார் மண்டபம், கோலாலம்பூர்

இவ்விழா மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத்தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தலைமையில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

ஓர் இலக்கிய விழாவாக மலரும் இந்த நூல் வெளியீட்டின் சிறப்பு அங்கமாக, மூத்தோர், இளையோர் கவியரங்கமும், இலக்கிய உரையும் இடம்பெறவிருக்கின்றது.

இந்த இலக்கிய விழாவில், கவிதைச் சுவையைப் பருக அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம் என நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுவினர், ப.இராமு அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.