(நவீனத் தமிழ் இலக்கியம், தொழில் நுட்ப வளர்ச்சியின் துணையோடு பலவித மாற்றங்களை அடைந்து வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மலேசிய எழுத்தாளர் விஜயலட்சுமியின் முயற்சியில் யூடியூப் களத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது ‘ஒலிப்பேழை’ என்னும் தளம். இந்த வாரம் சை.பீர் முகம்மது எழுதி 2020-ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட “அக்கினி வளையங்கள்” நாவலின் பாகம் 2 இடம் பெறுகிறது – ஆசிரியர்)
சை.பீர்முகம்மது நாவல் குறித்த விஜயலட்சுமியின் முன்னுரை
நாவல்: அக்கினி வளையங்கள் (பாகம் 2)
எழுத்து: சை. பீர்முகம்மது
பதிப்பு ஆண்டு: 2020
பாகம் 1–சுருக்கம்
பாகோ, புக்கிட் கெப்போங் குடியிருப்புகளில் கம்யூனிஸ்டு தாக்குதல். புக்கிட் கெப்போங் காவலர் குடியிருப்பு ஒன்றை வட்டமிட்டு கம்யூனிஸ்டுகள் இரவு நேரத்தில் தாக்குதலைத் தொடுத்து காவலர்களையும் அவர்தம் தலைவன் சார்ஜன் ஜமீல் உள்ளிட்டவர்களை சரணடையச் சொல்கிறார்கள். முதல்கட்ட தாக்குதலில் அதிகமான காவலர்கள் கொல்லப்படுகின்றனர். இரண்டாம் கட்ட தாக்குதல் உக்கிரமடைகிறது. கம்பத்து பாதுகாப்பு குழுனர் காவலர்களுக்கு உதவியாக கையில் கிடைத்தவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்தி எதிர்தாக்குதலைத் தொடுக்கின்றனர். நூறுக்கும் அதிகமான வீரர்களைக் கொண்டிருந்த கம்யூனிஸ்டு படை மளிகைக்கடைகளுக்குள் புகுந்து உணவு பொருள்களை அபகரிப்பதிலும், எதிர்த்துவரும் பொதுமக்களை முடக்குவதிலும் மும்முரமாகிறது. நள்ளிரவு தொடங்கிய தாக்குதல் அதிகாலை ஏழுவரை தொடர்கிறது. காவலர்கள் சரணடைய மறுப்பதை சார்ஜன் ஜமீல் ஒலிபெருக்கியில் முழங்குகிறார். கம்யூனிஸ்டுகளின் பெட்ரோல் குண்டு தாக்குதலில் காவலர்களின் குடும்பங்கள் கருகி மடிகின்றன.
பலர் பிணைக் கைதிகளாக்கப்படுகிறார்கள், பின் விடுவிக்கப்படுகிறார்கள். புக்கிட் கெப்போங்கில் நடந்த இத்தாக்குதல் குறித்த செய்தி ஊடகங்களில் பேசுபொருளாகி நாட்டு மக்களை மேலும் கலவரமடைய செய்கிறது. பத்து எஸ்டேட் காக்கா கடையில் இத்தாக்குதல் குறித்தான உரையாடல்கள் நடக்கின்றன. சண்முகம்பிள்ளையின் வண்டி ஓட்டுனர் முத்து, ப்போர்மேன் தேசிங்கு, ஆங்கிலேயரிடமிருந்து தோட்டத்தைப் புதிதாக விலைக்கு வாங்கிய சண்முகம்பிள்ளை, கடைக்காரர் காக்கா அவர் மனைவி பாத்திமா ஆகிய கதாபாத்திரங்கள் அறிமுகம்.
ஊரடங்கு நடப்பில் இருந்த சூழல் காட்சிப்படுத்தப்படுகிறது. முத்து, தேசிங்கு இருவருக்கும் இடையிலான நட்பு, நெருக்கம் தேசிங்கின் ஓர் அக்கறையான சொல்லில் இருந்து மலர்கிறது. கம்யூனிஸ்டுகள் நல்லவர்களா கொடியவர்களா என்ற கேள்வியோடு நிற்கும் முத்துவை பதில்கள் ஏதுமின்றி தேசிங்கு தட்டிக்கொடுக்கிறான்.
ஒலிப்பேழை – இது மலேசியத் தமிழ் இலக்கியத்தின் குரல்.
ஒலிப்பேழை வலையொளியை Subscribe செய்யுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள். நமது படைப்பையும் படைப்பாளர்களையும் கொண்டாடுவோம்.