Home உலகம் ரஷியா கைப்பற்றிய பிரதேசங்களை உக்ரேன் மீட்டு வருகிறது

ரஷியா கைப்பற்றிய பிரதேசங்களை உக்ரேன் மீட்டு வருகிறது

509
0
SHARE
Ad
டோன் பாஸ் என அழைக்கப்படும் பிரதேசங்கள்

கீவ் : கிழக்கு உக்ரேனின் முக்கியப் பகுதிகளை ரஷியா கைப்பற்றியிருந்தாலும், கட்டம் கட்டமாக உக்ரேன் அவற்றை மீட்டு வருகின்றன.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் தொடர்ந்து வழங்கி வரும் இராணுவ ஆயுதங்கள், நிதி உதவிகள் ஆகிவற்றின் காரணமாக உக்ரேன் தொடர்ந்து ரஷியாவுடனான போரில் முன்னேறி வருகிறது.

முக்கிய நகரமான லைமன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை கிழக்கு டொனெட்ஸ்க் பிரதேசத்தில் உக்ரேனியப் படைகள் கூடுதல் பகுதிகளை மீட்டெடுத்ததாக உக்ரேனிய இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

உக்ரேனின் கிழக்குப் பிரதேசமான லுஹான்ஸ்கை மீண்டும் வெல்வதற்கான முயற்சிகளின் போது ரஷ்ய இலக்குகளையும் உக்ரேன் தாக்கியது எனவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

அனைத்துலக சட்டத்தை மீறி உக்ரேனின் நான்கு பகுதிகளை ரஷியாவுடன் இணைக்கும் அதிபர் விளாடிமிர் புடினின் முடிவை திங்களன்று ரஷ்யாவின் நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ள நிலையில் கிழக்கில் உக்ரைனின் போர்க்கள வெற்றிகள் வந்துள்ளன.

புடினின் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மேற்கத்திய அரசாங்கங்கள் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட உக்ரேனின் பிரதேசங்களை ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்க மாட்டோம் என்றும் மேற்கத்திய நாடுகள் சூளுரைத்துள்ளன.

இதற்கிடையே ரஷியா ராணுவத்தில் இளைஞர்களைச் சேர்ப்பதற்காக ரஷியா அரசு தரப்புகள் வீடு வீடாக நுழைந்து இளைஞர்களை வலுக்கட்டாயமாக இராணுவத்தில் இணைத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.