Home நாடு மஇகா தேசிய முன்னணியில் இருந்து வெளியேறுமா? பொதுத் தேர்தலைப் புறக்கணிக்குமா?

மஇகா தேசிய முன்னணியில் இருந்து வெளியேறுமா? பொதுத் தேர்தலைப் புறக்கணிக்குமா?

571
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் பரபரப்பான திருப்பங்கள் மஇகா-தேசிய முன்னணியில் ஏற்பட்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை இரவு புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தேசிய முன்னணி வேட்பாளர்களை கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி அறிவித்தார். ஆனால் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அந்தக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

நாளை புதன்கிழமை (நவம்பர் 2) காலை 10.00 மணிக்கு மஇகா மத்திய செயலவையின் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் பொதுத் தேர்தலைப் புறக்கணிப்பதா? தேசிய முன்னணி கூட்டணியிலிருந்தே வெளியேறுவதா? என்ற முடிவை மஇகா எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் மஇகாவுக்கு 10 நாடாளுமன்றத் தொகுதிகளை தேசிய முன்னணி ஒதுக்கியுள்ளது. அந்தத் தொகுதிகளையும் வேட்பாளர்களையும் சாஹிட் ஹாமிடி இன்று அறிவித்தார்.