Home நாடு சைட் சாதிக், மூவார் தொகுதியை மீண்டும் தற்காக்கிறார்

சைட் சாதிக், மூவார் தொகுதியை மீண்டும் தற்காக்கிறார்

417
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மூடா கட்சியின் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் 2018-இல் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோகூரிலுள்ள மூவார் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவர் மீதான பணப் பரிமாற்றம் தொடர்பிலான வழக்கில் எதிர்வாதம் புரியும்படி அவர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் மூவார் தொகுதியைத் தற்காக்க போட்டியிட மாட்டார் என்ற ஆரூடங்கள் எழுந்தன. இருப்பினும் அந்த ஆரூடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் மீண்டும் மூவார் தொகுதியில் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத் தேர்தலில் பெர்சாத்து கட்சியின் சார்பில் மூவார் தொகுதியில் போட்டியிட்ட சைட் சாதிக் 6,953 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். தேசிய முன்னணியின் வேட்பாளர் ரசாலி பின் இப்ராகிமை அவர் தோற்கடித்தார்.