Home நாடு அம்னோவுக்கு எதிராகப் போட்டியிடும் 4 பேர் நீக்கம்

அம்னோவுக்கு எதிராகப் போட்டியிடும் 4 பேர் நீக்கம்

729
0
SHARE
Ad

கோலாலம்பூர் :  தங்களுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அம்னோ வேட்பாளர்களை எதிர்த்து நின்ற 4 முக்கியத் தலைவர்களை அம்னோ தலைமைத்துவம் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

பெர்லிசில் போட்டியிடும் டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம், டத்தோ சாஹிடி சைனுல் அபிடின், டத்தோஸ்ரீ இஸ்மாயில் அப்துல் முத்தலிப், டத்தோ அசார் அகமட் ஆகியோரே அந்த நால்வராவர்.

அம்னோ சட்டவிதிகளின்படி அம்னோ வேட்பாளருக்கு எதிராக சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடும் அம்னோ உறுப்பினர் இயல்பாகவே கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்பதைச் சுட்டிக் காட்டிய அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் இந்தத் தகவலை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

ஷாஹிடான் காசிம் ஆராவ் நாடாளுமன்றத் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இஸ்மாயில் அப்துல் முத்தலிப் மாரான் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இருவரும் அந்தத் தொகுதிகளின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

சாஹிடி பாடாங் பெசார் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். அசார் தித்தி திங்கி சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.