Home நாடு டத்தோஸ்ரீ எம்.சரவணனின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

டத்தோஸ்ரீ எம்.சரவணனின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

423
0
SHARE
Ad

மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி

மலேசியர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துகள்.

ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் இந்த கிறிஸ்துமஸ் பெருநாள் அனைத்து மலேசியர்களுக்குமான திருநாளாகவும் அமைகிறது. பொதுவாக வருட இறுதியில் அனைவரும் விடுமுறையில் செல்வது வழக்கம். அந்த வகையில் விடுமுறையோடு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு இணைந்து கொண்டாட்டங்கள் நிறைந்த ஒரு சூழ்நிலையை உண்டாக்கும்.

கிறிஸ்துமஸ் என்றாலே கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் தாத்தா, பரிசுப்  பரிமாற்றங்கள் இப்படி குதூகலத்தின் உச்சம்தான். அந்த குதூகலத்தோடு மலேசியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இந்த திருநாளைக் கொண்டாடுவோம்.

#TamilSchoolmychoice

இனத்தால், மதத்தால், கொள்கையால் வேறுபட்டாலும் நம்மை இணைப்பது இது போன்ற கொண்டாட்டங்கள்தான். பெருநாள் காலங்களில் அனைவரும் ஒன்று கூடி இனிதே கொண்டாடுவோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

வாழ்த்துகளுடன்,

டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்
ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்