Home இந்தியா ஈரோடு இடைத் தேர்தல் : அதிமுக சின்னம் யாருக்கு? புதிய நெருக்கடி!

ஈரோடு இடைத் தேர்தல் : அதிமுக சின்னம் யாருக்கு? புதிய நெருக்கடி!

810
0
SHARE
Ad

சென்னை : இப்போதைக்கு தமிழ்நாட்டில் இடைத் தேர்தல்கள் எதுவும் இல்லை என்பதாலும் – நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2024-இல்தான் நடைபெறும் என்பதாலும், அதிமுக வழக்கு முடிவடையாமல் மேலும் நீட்டித்துக் கொண்டே போகும் எனக் கருதப்பட்டது.

ஆனால், எதிர்பாராதவிதமாக காங்கிரஸ் கட்சியின் ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா தன் 47-வது வயதில் இன்று புதன்கிழமை (ஜனவரி 4) காலமானார்.

அவரின் மரணத்தைத் தொடர்ந்து ஈரோடு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அடுத்த 6 மாதங்களுக்குள்ளாக இந்த இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஈரோடு, அதிமுக வலுவுடன் திகழும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் தொகுதி என்பதால், இந்தத் தொகுதியை வென்று காட்ட வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஆனால், சின்னம் அவர் தரப்பு அதிமுகவுக்கு ஒதுக்கப்படுமா? அல்லது ஓபிஎஸ் தரப்பு அதிமுகவுக்கு ஒதுக்கப்படுமா? அல்லது இரு தரப்புகளுமே இணைந்த அதிமுகவுக்கு ஒதுக்கப்படுமா? என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

அதிமுக பொதுக் குழு தொடர்பிலான வழக்கும் இன்று புதன்கிழமை (ஜனவரி 4) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அதிமுக யார் பக்கம் என்பதும் தெளிவாகும்.