Home நாடு மலாக்காவின் புதிய முதல்வர் அப்துல் ரவுஃப்பா?

மலாக்காவின் புதிய முதல்வர் அப்துல் ரவுஃப்பா?

953
0
SHARE
Ad
அப்துல் ரவுஃப் யூசோ,

மலாக்கா : நாட்டின் சிறிய மாநிலமானாலும் அரசியல் சர்ச்சைகளின் வெப்பம் சற்றும் குறையாத மாநிலம் மலாக்கா. இந்த மாநிலத்தின் முதலமைச்சர் சுலைமான் அலி பதவியிலிருந்து விலகிவிட்டதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி அறிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து மலாக்கா அம்னோவின் மற்றொரு முக்கியப் புள்ளியான அப்துல் ரவுப் அடுத்த முதலமைச்சராகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தேசிய முன்னணியும், பக்காத்தான் ஹாரப்பானும் தற்போது இணைந்து மத்திய அரசாங்கத்தை அமைத்துள்ளதால், அந்த இரு கூட்டணிகளும் இணைந்து மலாக்காவில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.