Home உலகம் ரஷியா-உக்ரேன் போர் : இருதரப்பிலும் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு

ரஷியா-உக்ரேன் போர் : இருதரப்பிலும் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு

1620
0
SHARE
Ad
டோன் பாஸ் என அழைக்கப்படும் பிரதேசங்கள்

கீவ் : தொடர்ந்து வரும் ரஷியா-உக்ரேன் இடையிலான போரில் ஓரிடத்தில் போரினால் மரணமடைந்த நூற்றுக்கணக்கான உக்ரேன் போர்வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதே அளவிலான ரஷிய வீரர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த சடலங்களை ரஷியாவுக்குத் திருப்பி அனுப்ப உக்ரேன் ஒப்புக் கொண்டுள்ளது. எனினும், ரஷியா கைப்பற்றி வைத்திருக்கும் உக்ரேனிய வீரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் உக்ரேன் முன்வைத்திருக்கிறது.

கிழக்கு டோனெட்ஸ்க் பிரதேசத்தில் மேலும் முன்னேறுவதிலிருந்து ரஷியத் துருப்புகளைத் தடுத்து நிறுத்தியிருப்பதாகவும் உக்ரேன் அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் ரஷிய வெளியுறவு அமைச்சர், ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலைமைச் செயலாளரை நாளை திங்கட்கிழமை (ஏப்ரல் 24) சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு உக்ரேனின் முக்கியப் பகுதிகளை ரஷியா கைப்பற்றியிருந்தாலும், கட்டம் கட்டமாக உக்ரேன் இராணுவம் அவற்றை மீட்டு வருகின்றன.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் தொடர்ந்து வழங்கி வரும் இராணுவ ஆயுதங்கள், நிதி உதவிகள் ஆகிவற்றின் காரணமாக உக்ரேன் தொடர்ந்து ரஷியாவுடனான போரில் முன்னேறி வருகிறது.

அனைத்துலக சட்டத்தை மீறி உக்ரேனின் நான்கு பகுதிகளை ஏற்கனவே ரஷியாவுடன் இணைத்துள்ளார் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின்.

புடினின் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மேற்கத்திய அரசாங்கங்கள் பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட உக்ரேனின் பிரதேசங்களை ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்க மாட்டோம் என்றும் மேற்கத்திய நாடுகள் சூளுரைத்துள்ளன.