Home நாடு சிவகுமார் உதவியாளர்களை மீண்டும் நியமித்தது நன்னெறி அடிப்படையில் தவறு – பெர்சாத்து கண்டனம்

சிவகுமார் உதவியாளர்களை மீண்டும் நியமித்தது நன்னெறி அடிப்படையில் தவறு – பெர்சாத்து கண்டனம்

1414
0
SHARE
Ad

கோலாலம்பூர் :மனித வள அமைச்சர் வ.சிவகுமாரின் உதவியாளர்கள் இருவர் மீண்டும் அதே பதவிகளுக்கு நியமிக்கப்பட்டது நன்னெறி அடிப்படையிலும் ஒழுக்கம் அடிப்படையிலும் தவறானது என பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ரசாலி இட்ரிஸ் தெரிவித்தார்.

வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விதமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும் இந்த அரசு இந்தப் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை முடிவுகள் என்ன?

மனித வள அமைச்சர் வி. சிவகுமார் மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை அறிவிக்கும்படி பெர்சாத்து கட்சியின் இணைப் பிரிவின் தகவல் பொறுப்பாளர் எஸ்.சுப்பிரமணியம் ஏற்கனவே கேள்வியைத் தொடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

காரணம், ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்பட்ட சிவகுமாரின் உதவியாளர்கள் இருவர், தடுப்புக் காவலுக்குப் பின்னர் மீண்டும் அதிகாரபூர்வ பணிக்குத் திரும்பியுள்ளதாக சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

அதாவது தாயும் மகனும் என இரு உதவியாளர்கள் மீண்டும் தங்களின் பணிக்குத் திரும்பியுள்ளதால் விசாரணையின் முடிவு என்ன என்பதை ஊழல் தடுப்பு ஆணையம் அறிவிக்க வேண்டும் எனவும் சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.