Home நாடு மஇகா போட்டியிடாத முதல் தேர்தல் – 6 மாநிலங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 29 –...

மஇகா போட்டியிடாத முதல் தேர்தல் – 6 மாநிலங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 29 – வாக்களிப்பு ஆகஸ்ட் 12

438
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டின் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 29-ஆம் தேதியும், வாக்களிப்பு ஆகஸ்ட் 12-ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று புதன்கிழமை (ஜூலை 5) அறிவித்தது.

அதைத் தொடர்ந்து மஇகாவும் மசீசவும் இந்தத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனவும் ஆனால் , தங்களின் கூட்டணி வேட்பாளர்களுக்கும், மற்ற ஒற்றுமை அரசாங்க ஆதரவு வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1946 கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து நாட்டில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் மஇகா தொடர்ச்சியாகப் போட்டியிட்டு வந்துள்ளது. வெற்றியோ, தோல்வியோ தொடர்ந்து ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் மஇகா தன் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

இப்போதுதான் முதன் முறையாக மஇகா தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவில் மஇகா தலைமைத்துவம் இறுதிவரை உறுதியாக இருக்குமா அல்லது தங்களுக்குரிய தொகுதிகளைப் பெறுவதற்காக தேசிய முன்னணிக்கும், ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கும் மஇகா, மசீச தரும் மறைமுக நெருக்குதல் இதுவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.