Home நாடு சிலாங்கூர் சட்டமன்ற தேர்தல் : பிகேஆர் 20 தொகுதிகளில் போட்டி! இருவர் இந்தியர்!

சிலாங்கூர் சட்டமன்ற தேர்தல் : பிகேஆர் 20 தொகுதிகளில் போட்டி! இருவர் இந்தியர்!

445
0
SHARE
Ad

கிள்ளான் : சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் – தேசிய முன்னணி இணைந்து மீண்டும் கைப்பற்றுமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பிகேஆர் போட்டியிடுகிறது. இதில் 2 தொகுதிகளில் இந்தியர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் புக்கிட் மெலாவாத்தி சட்டமன்றத் தொகுதியில் எஸ்.தீபன் போட்டியிடுகிறார். ஏற்கனவே இந்த சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்து வந்த ஜூவாரியா சுல்கிப்ளி உலு கிளாங் தொகுதியில் போட்டியிடுகிறார்.

செந்தோசா தொகுதியில் மற்றொரு இந்திய வேட்பாளரான குணராஜ் ஜோர்ஜ் மீண்டும் போட்டியிடுகிறார்.