Home நாடு சாஹிட் ஹாமிடி மீதான விசாரணைகள் தொடர்கின்றன – அசாம் பாக்கி அறிவிப்பு

சாஹிட் ஹாமிடி மீதான விசாரணைகள் தொடர்கின்றன – அசாம் பாக்கி அறிவிப்பு

398
0
SHARE
Ad
டான்ஶ்ரீ அசாம் பாக்கி

கோலாலம்பூர் : துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி தொடர்புடைய அகால்புடி அறவாரியம் மீதான ஊழல் விசாரணைகள் இன்னும் தொடர்ந்து நீடிப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார்.

எனினும் மேலும் எவ்வளவு காலத்திற்கு இந்த விசாரணைகள் நீடிக்கும் என்பது குறித்து அவர் விளக்கமாக தெரிவிக்கவில்லை. அது விசாரணை நடத்தும் அதிகாரிகளை பொறுத்தது என அவர் குறிப்பிட்டார். கடந்த திங்கட்கிழமை செப்டம்பர் 4-ஆம் தேதி சாஹிட் ஹாமிடி 47 குற்றச்சாட்டுகளிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.

வழக்கை நடத்திய அரசாங்க வழக்கறிஞர் முகமட் டுசுக்கி மொக்தார் சமர்ப்பித்த 11 காரணங்களின் அடிப்படையில் நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுயிரா சாஹிட்டை DNAA -Discharge not amounting to acquittal – அடிப்படையில் விடுதலை செய்தார். புதிய ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு மீதான விசாரணைகள் தொடர்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடி மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட்டிருப்பது எதிர்கட்சிகளிடையே கண்டனங்களை தோற்றுவித்துள்ளது. மூடா கட்சியின் தலைவர் சைட் சாதிக் காணொலி மூலம் தன் கடுமையான கண்டனங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அகால்புடி அறவாரியத்தின் பணத்தை முறைகேடாக கையாண்டதற்காக அவர் மீது கொண்டு வரப்பட்டிருந்த 47 குற்றச்சாட்டுகளை மீட்டுக் கொண்டு அவரை தற்காலிகமாக விடுவிப்பதாக அரசு வழக்கறிஞர் தரப்பு இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. எனினும் அவர் இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து இன்னும் முழுமையாக குற்றமற்றவர் என அறிவிக்கப்படவில்லை.

அவர் தொடர்பான ஊழல் வழக்குகள் மீதான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் தற்காலிகமாக அவர் மீதான வழக்குகளை மீட்டுக் கொண்டு அவரை விடுவிப்பதாக திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 4) அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அண்மையில் இருநூறு பக்க மேல்முறையீடு ஒன்றை சாஹிட் ஹாமிடியின் வழக்கறிஞர்கள் சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தனர். அதன் அடிப்படையில் அவர் இந்த வழக்குகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த விடுதலையை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

அரசு தரப்பு வழக்கறிஞரின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த நீதிபதி கோலின் செகுயிரா, சாஹிட் ஹாமிடி மீதான வழக்குகள் முழுமையாக மீட்டுக் கொள்ளப்பட்டால், வருமான வரி செலுத்தும் பொதுமக்களின் பணமும், நீதித்துறையின் நேரமும் விரயமாகி விடும் என்றும் தெரிவித்தார்.