Home இந்தியா அண்ணாமலை மாற்றப்பட்டால் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்படுமா?

அண்ணாமலை மாற்றப்பட்டால் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்படுமா?

423
0
SHARE
Ad

சென்னை : பாஜக-அதிமுக கூட்டணி இல்லை என்ற முடிவால் தமிழக அரசியலில் பரபரப்பும் விறுவிறுப்பும் ஏற்பட்டிருக்கிறது.

திமுகவைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலையில் – அந்தக் கூட்டணியில் தஞ்சமடைந்திருந்த சிறிய கட்சிகள் அதிமுகவுடன் இணையும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியே அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற அளவுக்கு சில ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இப்போது எங்கும் எழுந்துள்ள கேள்வி – நாடாளுமன்றத் தேர்தல் வரை இந்த முடிவு நிலைத்திருக்குமா அல்லது இறுதி நேரத்தில் மீண்டும் பாஜக-அதிமுக இணையுமா என்பதுதான். அப்படியே இணைந்தாலும், தொண்டர்களிடையே நிலவும் பிளவால் தேர்தல்களில் தோல்விதான் கிடைக்கும் என்ற கருத்தும் வெளியிடப்படுகிறது.

இந்த சூழலில் அண்ணாமலையை பாஜகவின் தேசிய தலைமை டெல்லிக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதிமுக கூட்டணி இல்லாமல் தமிழ் நாட்டில் வெற்றி பெற வழிகள் என்ன என்பது குறித்து பாஜக தலைமை விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை மாற்றப்பட்டால், அவருக்குப் பதிலாக புதிய தமிழ்நாடு பாஜக தலைவர் நியமிக்கப்பட்டால், மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.