Home நாடு “அடுத்த தலைமுறையை செதுக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள்” – தலைமையாசிரியர் மாநாட்டில் சரவணன் உரை

“அடுத்த தலைமுறையை செதுக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள்” – தலைமையாசிரியர் மாநாட்டில் சரவணன் உரை

414
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (செப்டம்பர் 27) காலையில் நடைபெற்ற தமிழ்ப் பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர்கள் கழக மாநாட்டிற்கு டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்பு வருகை தந்து உரையாற்றினார்.

தலைமையாசிரியர் கழகத்தின் ஈராண்டு பொதுக்கூட்டமும் இந்த மாநாட்டுடன் இணைந்து நடத்தப்பட்டது.

“நல்ல சொல் சொல்லி என்னை நல்வழிப்படுத்திய நல்லாசிரியர் திருச்சபையே உன்னை நன்றியோடு வணங்குகிறேன்” என சரவணன் தன் உரையைத் தொடங்கினார்.

#TamilSchoolmychoice

மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் 12 ஆவது பொதுக்கூட்ட நிறைவு விழாவிற்குத் தலைமை தாங்கியது குறித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார் சரவணன்.

“தலைமைத்துவம் என்பது பதவி அல்ல செயல். வழிகாட்டக் கூடிய தலைமைத்துவம் இல்லாத குடும்பம், இனம், இயக்கம், சமூகம் பிறர் அழிக்காமல் தானாக அழிந்துவிடும். அடுத்தத் தலைமுறகளை செதுக்கக் கூடிய சிற்பிகளாக ஆசிரியர்கள் இருக்கிறார்கள். புதிய இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். என்ன மாற்றம் வரும் என்பது தெரியாது. கோவிட் வந்த பிறகுதான் கல்வித் தேர்வுகள் கூட இணையம் மூலம் நடத்தப்பட முடியும் என்பது நமக்குத் தெரிய வந்தது. சிந்திக்கக் கூடிய தலைமுறையை உருவாக்கும் கடமை ஒவ்வொரு ஆசிரியருக்கும் உண்டு. மாணவர்களைச் செதுக்கும் சிற்பிகளாக ஆசிரியர்கள் உருமாற்றம் காண வேண்டும்” என்றும் சரவணன் தன் உரையில் குறிப்பிட்டார்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”  என்ற திருக்குறளையும் சரவணன் தன் உரையில் மேற்கோள் காட்டினார்.

பள்ளிகளில் சமயக் கல்வி அவசியம் என்றும் வலியுறுத்திய சரவணன், தமிழில் பக்தி இலக்கியத்தைப் படிக்காமல், தமிழின் அழகையும், மேன்மையையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.