Home நாடு “பிரதமர் புதிய அரசியல் கட்சிக்கு ஆதரவு தரவில்லை” – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

“பிரதமர் புதிய அரசியல் கட்சிக்கு ஆதரவு தரவில்லை” – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

379
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) கிள்ளான் லெட்சுமணா மண்டபத்தில் இந்தியர்களுக்கான ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. புதிய அரசியல் கட்சி தொடங்குவதற்கான விவாதங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றன.

இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 9) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் எந்த ஓர் அரசியல் கட்சி தோற்றுவிக்கப்படுவதற்கும் பிரதமர் ஆதரவோ அங்கீகாரமோ தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் கட்சி தோற்றுவிக்கப்படுவதில் பிரதமர் பெயரை எந்தத் தரப்பும் தவறாகப் பயன்படுத்துவதையும் பிரதமர் அலுவலகம் கடுமையானதாகக் கருதுகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இத்தகைய நடவடிக்கையில் பிரதமர் பெயரையோ அலுவலகத்தையோ சம்பந்தப்படுத்துவது பொறுப்பற்ற செயல் என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.

எனவே, மற்ற தரப்புகள் பிரதமரின் அனுமதியின்றி வெளியிடும் அதிகாரபூர்வமற்ற எந்த அறிக்கை அல்லது தகவல்கள் குறித்து பொதுமக்கள் பொருட்படுத்த வேண்டாம் எனவும் அந்த அறிக்கை கேட்டுக் கொண்டது.