Home உலகம் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் : பலி எண்ணிக்கை 1000 தாண்டியது – அமெரிக்க போர்க்கப்பல் ஈடுபடுகிறது

இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் : பலி எண்ணிக்கை 1000 தாண்டியது – அமெரிக்க போர்க்கப்பல் ஈடுபடுகிறது

533
0
SHARE
Ad

ஜெருசலம் : திடீரென மூண்டு மோசமான கட்டத்தை அடைந்திருக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போரில் இதுவரையில் இரு தரப்பிலும் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் திடீர் தாக்குதல் நடந்து 48 மணி நேரத்திற்குள் காசாவைச் சுற்றியுள்ள அனைத்து சமூகங்களின் கட்டுப்பாட்டையும் தாங்கள் எடுத்துக்கொண்டுள்ளதாக  இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இசை விழா ஒன்றின் மீதான தாக்குதலில் இஸ்ரேலிய மீட்புப் படையினர் 260 பேர் சடலங்களைக் கண்டெடுத்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை பிடித்து வைத்திருப்பதாக ஹமாஸ் கூறுகிறது.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர், காசாவின் “முழுமையான முற்றுகைக்கு” உத்தரவிட்டுள்ளதாகவும், மின்சாரம், உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைத் துண்டிக்கவும் உத்தரவிட்டார். இஸ்ரேல் காசாவை வான்வழித் தாக்குதல்களால் தாக்கி வருகிறது.

இதற்கிடையில் அமெரிக்கா தனது கடற்படை விமானந்தாங்கிக் கப்பலை போர் சூழ்ந்திருக்கும் மெடிட்டரேனியன் கடல் பகுதிக்கு அனுப்புகிறது. இந்த நடவடிக்கை பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அமெரிக்காவில் நகர்வு என ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் தனது போர் விமானங்களையும் அமெரிக்கா தயார் நிலையில் வைத்திருக்கிறது.

இதற்கிடையில் இந்தப் போரில் ஈரானும் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து தங்களுக்கு நேரடியான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.