ராகுல் காந்தி புத்ரா ஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்திப்பதற்கும், அதன் பின்னர், மாலை 5.00 மணிக்கு மஇகா தலைமையகத்திற்கு வருகை தருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
நாளை ஞாயிற்றுக்கிழமை மலாயாப் பல்கலைக் கழக மாணவர்களிடையே அவர் உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் 9 மார்ச் 2018-ஆம் நாள் கோலாலம்பூருக்கு வருகை தந்தபோது ராகுல் காந்தி மார்ச் 10-ஆம் தேதி மஇகா தலைமையகத்திற்கு வருகை தந்தார். பல பொது நிகழ்ச்சிகளிலும் கோலாலம்பூர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.