Home இந்தியா மாவட்டம் தோறும் தேமுதிக சார்பில் மே தின பொதுக்கூட்டம்

மாவட்டம் தோறும் தேமுதிக சார்பில் மே தின பொதுக்கூட்டம்

521
0
SHARE
Ad

vijayakanthசென்னை, ஏப்ரல் 26- தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:-

உழைப்பாளிகளை முதலாளிகள் அடிமையாக நடத்தியதற்கு முற்றுப்புள்ளி வைத்த நாள் மே தின நாள்.

உழைப்பவர்களும் உரிமை உடையவர்கள் என்பதை நிலைநாட்ட உயிரையே பணயம் வைத்த வரலாறு மே தினத்துக்கு உண்டு.

#TamilSchoolmychoice

உழைப்புக்கு உயர்வு தேடும் இந்த நன்நாளை தேமுதிக மற்றும் அதை சார்ந்த தொழிற்சங்க பேரவையும் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

இந்த ஆண்டு மே தின விழாவை கொண்டாடும் வகையில் கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் நடக்கும் கொடியேற்று விழாவில் விஜயகாந்த் தொழிற்சங்க கொடியேற்றுகிறார்.

அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சங்க கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெறும்.

இதில் விஜயகாந்தால் அறிவிக்கப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள், தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவை சிறப்பாக கொண்டாட கேட்டுக் கொள்கிறோம்.