Home நாடு சுகாதார அமைச்சர் சுல்கிப்ளிக்கு உடல் நலக் குறைவு

சுகாதார அமைச்சர் சுல்கிப்ளிக்கு உடல் நலக் குறைவு

341
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட் இன்று புதன்கிழமை (மார்ச் 12) அதிகாலையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனை ஒன்றின் அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் சிறுசீரகத்தில் கல் அடைப்பு காரணமாக அவதிப்படுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுல்கிப்ளி உரிய சிகிச்சைகளைப் பெற்று வருகிறார் என்றும் தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் சுகாதார அமைச்சின் அறிக்கை ஒன்று தெரிவித்தது. அவர் கூடிய விரைவில் உடல்நலம் பெற்று தன் பணிகளுக்குத் திரும்புவதற்கு அனைவரும் பிரார்த்திப்போம் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.