Home இந்தியா பொன்முடி, மீண்டும் அமைச்சராகிறார்!

பொன்முடி, மீண்டும் அமைச்சராகிறார்!

413
0
SHARE
Ad
பொன்முடி

சென்னை : முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையைத் தொடர்ந்து அமைச்சர் பதவியை இழந்த அவரை, மீண்டும் அமைச்சராக நியமிக்க தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாடு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்த ஓரிரு நாட்களில் பொன்முடி அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் க.பொன்முடி – அவரது மனைவி விசாலாட்சி – ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த டிசம்பர் 21ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் இருவருக்கும் தலா 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அந்தத் தண்டனையை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையைத் தொடர்ந்து அவரின் திருக்கோயிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

பொன்முடியின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால் அவர் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார்.

3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். அவருக்குப் பதிலாக புதிய உயர்க்கல்வித்துறை அமைச்சராக ராஜகண்ணப்பனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பொன்முடி முன்பு வகித்த உயர் கல்வித் துறை அமைச்சராகவே மீண்டும் நியமிக்கப்படுவாரா அல்லது அவருக்கு வேறு பொறுப்பு வழங்கப்படுமா என்பது இன்னும் தெரியவில்லை.