Home நாடு ராபர்ட் டான் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ராபர்ட் டான் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

362
0
SHARE
Ad


கோலாலம்பூர் : ஸ்பான்கோ நிறுவனத்தின் உரிமையாளர் டான்ஶ்ரீ ராபர்ட் தான் ஹூவா சூன் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 3) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்.

முன்னாள் நிதியமைச்சர் டாயிம் சைனுடினுக்கு நெருக்கமானவராக அவர் கருதப்படுகிறார்.

அரசாங்க வாகனங்களை நிர்வகிக்கும் உரிமம் அவரின் ஸ்பான்கோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அந்த விவகாரத்தில் உள்ள முறைகேடுகள் தொடர்பில் அவர் குற்றம் சாட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கோலாலம்பூர் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் குற்றவியல் வழக்குகளின் பட்டியலில் அவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது என ஊடகங்கள் தெரிவித்தன.

டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்ட ராபர்ட் டான் 2022 முதல் 2037 வரையிலான 15 ஆண்டு காலகட்டத்திற்கு அரசாங்க வாகனங்களை நிர்வகிக்கும் 4.5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உரிமத்தைப் பெற்றுள்ள ஸ்பான்கோ நிறுவனத்தின் உரிமையாளராவார்.

அவரை அண்மையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்தது.