Home நாடு ரமணன் : “இந்திய மகளிர் வணிகர்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட் கடனுதவி”

ரமணன் : “இந்திய மகளிர் வணிகர்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட் கடனுதவி”

388
0
SHARE
Ad
டத்தோ ஆர்.ரமணன்

கோலாலம்பூர் : அமானா இக்தியார் மலேசியா என்னும் அரசாங்கத்தின் சிறுகடனுதவித் திட்டத்தின் கீழ் இந்திய மகளிர் வணிகர்களை மேலும் வலிமையாக்க 50 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கப்படுவதாக டத்தோ ஆர்.ரமணன் அறிவித்தார்.

தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத் துறை துணை அமைச்சரான ரமணன், இந்த நிதி உதவித் திட்டத்தின் கீழ், 7,100 புதிய இந்திய வணிகர்கள் பயனடைவர் என்றும் இந்தக் கடனுதவித் திட்டத்தின் கீழ் பயனடைபவர்களின் எண்ணிக்கை மொத்தம் 10,200 ஆக உயரும் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே, 3,100 பேர் இந்த நிதி உதவித் திட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

எந்த ஒரு குடிமகனும் நாட்டின் மேம்பாட்டிலிருந்து விடுபட்டு விடக் கூடாது என்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் இலக்குக்கு ஏற்ப இந்த நிதி உதவித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் ரமணன் தெரிவித்தார்.