பார்ட்டி ராயாட் மலேசியா சார்பில் ஹாஃபிசா சைனுடின் போட்டியிடுகிறார். நியாவ் கே சின் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். சிங்க் பூன் லாய் என்பவர் சுயேட்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரின் வேட்புமனு முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டது.
ஜசெக வேட்பாளர் பாங் சோக் தாவ் வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்-கின் பத்திரிகைச் செயலாளர் ஆவார். 31 வயதான பாங் சோக் தாவ் அம்பாங் வட்டாரத்தைச் சேர்ந்தவர். யூனிடென் என்னும் தெனாகா நேஷனல் பல்கலைக் கழகத்தின் மின்சாரம், மின்னியல் துறை பட்டதாரியான பாங் 2018-2020 காலகட்டத்தில் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அமைச்சரின் செயலாளராகப் பணியாற்றியிருக்கிறார். 2020-2022 காலகட்டத்தில் ஜசெக பிரச்சார ஊடகமான ஊபா டிவி என்னும் ஊடகத்தின் உதவித் தயாரிப்பாளராக செயல்பட்டார்.