Home Video அரண்மனை 4 – சுந்தர் சி நடிப்பிலும் இயக்கத்திலும் மிரட்டும் பேய் படம்!

அரண்மனை 4 – சுந்தர் சி நடிப்பிலும் இயக்கத்திலும் மிரட்டும் பேய் படம்!

414
0
SHARE
Ad

சென்னை : தமிழ் சினிமாவையும் பேயையும் பிரிக்க முடியாது. அவ்வப்போது யாராவது பேய் பற்றிய படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்த வரிசையில் அரண்மனை என்ற பெயரில் படம் எடுத்த இயக்குநர் சுந்தர் சி வரிசையாக இதுவரை அதே தலைப்பில் 3 படங்களை வெளியிட்டு விட்டார்.

முதல் படம் அமோக வெற்றி. அடுத்த வந்த படங்கள் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் சுமாரான வசூலை வாரிக் குவித்தன.

4-வது படத்தை சுந்தர் சி இயக்கியிருப்பதோடு, முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இந்திய அளவில் கவர்ச்சியில் கலக்கும் இரண்டு நடிகைகள் – தமன்னா, ராஷி கண்ணா இருவரையும் படத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார். அவர்கள் இருவரும் ஆடும் கவர்ச்சிப் பாடலையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

விரைவில் திரையீடு காணவிருக்கும் அரண்மனை – 4 படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் காணலாம்: