Home நாடு கண்ணதாசன் விழா ஜூன் 23-இல் நடைபெறும்!

கண்ணதாசன் விழா ஜூன் 23-இல் நடைபெறும்!

752
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கண்ணதாசனுக்கு ஆண்டுதோறும் விழா எடுத்துக் கொண்டாடும் நாடு மலேசியா. கண்ணதாசன் அறவாரியம் ஏற்பாட்டில், கண்ணதாசன் விழா 2024 நிகழ்ச்சி எதிர்வரும் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை..’
– கண்ணதாசன்

கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் தலைமையில் “கண்ணதாசன் விழா 2024” கீழ்க்காணும் வகையில் நடைபெறும்:

#TamilSchoolmychoice

Date : 23/06/2024, Sunday
Time : 11am
Venue : Chettiar Hall, Jalan Ipoh KL

காலத்தை வென்றவர் கவியரசு கண்ணதாசன். அவர் விட்டுச்சென்ற இலக்கியங்களைக் கேட்பதும், பார்ப்பதும், இரசிப்பதும் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். தமிழ் அமுதம் பருக தமிழன்பர்களும், இலக்கியப் பிரியர்களும் திரண்டு வருக என ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர்.

#நுழைவு இலவசம்
#உணவு வழங்கப்படும்