Home அரசியல் நிக் அஜீஸை காண புத்ரா ஜெயா பள்ளி வாசலில் ஆயிரக்கணக்கோர் திரண்டனர்!

நிக் அஜீஸை காண புத்ரா ஜெயா பள்ளி வாசலில் ஆயிரக்கணக்கோர் திரண்டனர்!

949
0
SHARE
Ad

nik-aziz-iron-mosqueபுத்ரா ஜெயா, ஏப்ரல் 27- புத்ரா ஜெயா பள்ளி வாசலில் பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜீஸ் நிக் மட்டைக் காண ஆயிரக்கணக்கோர் திரண்டனர்.

நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தின்போது, புத்ரா ஜெயா ஏரிக்கரை அருகாமையிலுள்ள பள்ளிவாசலில் நிக் அஜீஸும், புத்ரா ஜெயா நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான உசாம் மூசாமும் தொழுகை மேற்கொண்டபோது ஆயிரக்கணக்கோர் அவர்களுடன் கலந்து கொண்டனர்.

நிக அஜீஸ் புத்ரா ஜெயா வந்த காட்சி முகநூலில் காணொளியாக உலாவி வரும் அளவிற்கு, நேற்று புத்ரா ஜெயாவில் மக்கள் வெள்ளம் கரைபுரண்டோடியது.

#TamilSchoolmychoice

நிக் அஜீஸின் வருகை உசான் மூசாமின் வெற்றியை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தை காணும்போது மக்களின் மன மாற்றத்தை தெளிவாக உணர முடிவதாக நிக் அஜீஸ் தெரிவித்தார்.

13ஆவது பொதுத்தேர்தலில் புத்ரா ஜெயாவில் 15,798 வாக்காளர்கள் இருக்கின்றனர். அதில் 94 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 3 விழுக்காட்டினர் இந்தியர்கள், மற்றவர்கள் 2 விழுக்காட்டினர்.

இந்த தொகுதியில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், அம்னோ தலைமை செயலாளருமான துங்கு அட்னானை எதிர்த்து இப்பொதுத்தேர்தலில் உசாம் மூசாம் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.