அமெரிக்கா, ஏப்ரல் 27- அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் தம்பா பெண்கள் சங்கம் நிதி திரட்டுவதற்காக ‘ஷாம்பெய்ன்” போட்டி நடத்தியது. இதில் 80 வயது மூதாட்டி வைரத்துடன் இருந்த சரக்கை தெரியாமல் குடித்தார்.
ஷாம்பெயின் போட்டியில் நிதி கொடுக்கவந்த ஒரு நிறுவனம் அன்பளிப்பாக ஷாம்பெயின் கோப்பையில் ரூ.3 லட்சம் மதிப்பிலான வைரத்தை போட்டது.
மொத்தம் 400 கோப்பைகள். இதில் எந்தக் கோப்பையில் வைரம் இருக்கிறது என்று தெரியாது. அந்த வைரம் போடப்பட்ட கோப்பை யாரிடம் கிடைக்கிறதோ அவருக்கே அந்த வைரம் சொந்தம் என்பதுதான் விஷயம்.
ஆயிரம் ரூபாய்கள் ஒரு கோப்பை என்று அனைவரும் வாங்கிக் ஷாம்பெய்ன் குடித்தனர். இதில் வைரம் போட்டிருந்த அந்த அதிர்ஷ்டக்கோப்பை மிரியம் டக்கர் என்ற 80 வயது மூதாட்டியிடம் வந்தது.
அவர் வைரமிருப்பது தெரியாமல் வைரத்துடன் சரக்கையும் விழுங்கினார். அரங்கில் இதனால் சிரிப்பலை எழுந்துள்ளது.
ஆனால வைரம் உடலுக்குள் போனால் உயிருக்கல்லாவா ஆபத்து? அவர் உடனே மருத்துவரை அணுகி வயிற்றிலிருந்து வைரத்தை எடுத்தார்.