Home இந்தியா சரவணனுக்கு தமிழ் நாட்டில் ‘அயலகத் தமிழ்க் காவலர்’ விருது வழங்கப்பட்டது!

சரவணனுக்கு தமிழ் நாட்டில் ‘அயலகத் தமிழ்க் காவலர்’ விருது வழங்கப்பட்டது!

239
0
SHARE
Ad
ஆத்தூர் (சேலம்) – ஆத்தூர் “பாரதி மகாத்மா பண்பாட்டுப் பேரவையின்” ஏற்பாட்டில் ‘காந்தியடிகளின் 156 ஆவது பிறந்தநாள் விழா’ பைந்தமிழ் பெருவிழாவாக மிகச் சிறப்பாக சேலம் ஆத்தூரில் கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் 4-ஆம் நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்புப் பிரமுகராக மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான, டத்தோஸ்ரீ எம்.சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணனுக்கு ‘அயலகத் தமிழ்க்காவலர்’ விருது வழங்கி கொளரவிக்கப்பட்டது.

இந்த விழாவில் கவிஞர் ஆத்தூர் சுந்தரம் அவர்கள் எழுதிய ‘கதவுகள் திறந்துவிடு’ எனும் மரபுக் கவிதை நூலையும் அவர் வெளியீடு செய்து வைத்தார் . நாடகம், பேச்சரங்கம், கவிநயம் என முத்தமிழின் சங்கமமாக தமிழின் சுவையோடு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது என சரவணன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

 

#TamilSchoolmychoice