எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரப் பயணத்தில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முக்கியப் போர்க்கள மாநிலமான பென்சில்வேனியாவில் போட்டிப் பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
தேர்தல் நாளுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு இறுதி நேரத்தில் தங்கள் உரைகளை வழங்க இரண்டு வேட்பாளர்களும் முனைந்துள்ளனர்.
ஹாரிஸுக்கு 50% வாக்காளர்கள் ஆதரவளிக்கின்றனர், ட்ரம்புக்கு 47% பேர் ஆதரவளிக்கின்றனர் என்பதே இப்போதைய நிலைமை.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முழுவதும் முன் வாக்குப்பதிவு மற்றும் அஞ்சல் மூலமான வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது.