Home உலகம் ஈரான் இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரான் இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

157
0
SHARE
Ad

டெல் அவிவ்: தங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் இன்று சனிக்கிழமை (அக்டோபர் 26) ஈரானின் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட ஈரானின் பல இடங்களில் வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும் தீப்பிழம்புகள் எழுந்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.

எனினும் ஈரானின் எண்ணெய் வளங்கள் மீதோ, அணுஆயுதக் கிடங்குகள் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை என இஸ்ரேல் அறிவித்தது.

இந்தத் தாக்குதல்களினால் எத்தகைய சேதங்கள் விளைந்தன – உயிருடற் சேதங்கள் உள்ளனவா – என்பது குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை.