Home உலகம் டிரம்ப் பதவியேற்பு சாதனை : சமூக ஊடகங்களில் 80 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்!

டிரம்ப் பதவியேற்பு சாதனை : சமூக ஊடகங்களில் 80 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்!

95
0
SHARE
Ad

வாஷிங்டன் : கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அதிபராக வெற்றி பெற்று சாதனை படைத்தது ஒருபுறமிருக்க – இன்னொரு கோணத்திலும் புதிய சாதனை படைத்திருக்கிறார்.

அவரின் பதவியேற்பு நிகழ்ச்சியை 80 மில்லியனுக்கும் மேற்பட்டோர் சமூக ஊடகங்களில் பார்த்தனர் என்பதே அந்த சாதனை. யூடியூப் தளத்தில் மட்டும் 9.6 மில்லியன் பேர் அவரின் பதவியேற்பு நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்த வேளையில், அவரின் எக்ஸ் தளத்தின்வழி 36.7 மில்லியன் பார்வையாளர்கள் அவரின் பதவியேற்பு நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.

இவற்றோடு தொலைக்காட்சி ரசிகர்களையும் சேர்த்தால் ஏறத்தாழ 80.7 மில்லியன் பேர் டிரம்பின் பதவியேற்பை நிகழ்ச்சியை பார்த்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னர் அதிகமானோர் பார்த்து ரசித்த அமெரிக்க அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சி 1981-இல் பிரதமரான ரொனால்ட் ரீகனின் பதவியேற்பு நிகழ்ச்சியாகும். அதனை 42 மில்லியன் பேர் பார்த்தனர். அவ்வளவு பேர் பார்த்ததும் தொலைக்காட்சி வழிதான். அப்போது சமூக ஊடகங்களோ, இணைய வசதிகளோ இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.